வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான Payroll Account

பதிவு செய்வது எப்படி

படி 1
App Store, Google Play அல்லது AppGallery-யிலிருந்து digibank கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கவும்.

படி 2
digibank கைப்பேசி செயலியை இயக்கி, Sign up for digibank என்பதைத் தட்டவும்.

படி 3
I need digibank access என்பதைத் தட்டவும்.

படி 4
ATM/வங்கி அட்டையைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5
உங்கள் ATM/வங்கி அட்டையின் எண், 6 இலக்க PIN எண்ணை உள்ளிட்டு Next என்பதைத் தட்டவும்.

படி 6
உங்களுக்கு விருப்பமான பயனர் ID & PIN எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் சான்றுமெய்ப்பிப்புகளைப் பூர்த்தி செய்யவும். உங்கள் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி ஆகியவற்றைச் சரிபார்த்து Next என்பதைத் தட்டவும்.

படி 7
மீள்பார்வை செய்து விவரங்களை உறுதிசெய்து, Confirm என்பதைத் தட்டவும்.

படி 8
உங்கள் digibank ஒருங்கிணைப்பு முடிந்தது. அடுத்து உங்கள் மின்னிலக்க 'டோக்கனை' அமைக்க, 'Proceed to digibank' என்பதைத் தட்டவும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் SMS OTP-ஐப் பயன்படுத்தி அமைத்தல்

படி 1
உங்கள் digibank செயலியை இயக்கி, Digital Token என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2
Set Up Now என்பதைத் தட்டவும்.

படி 3
உங்கள் Touch / Face ID அல்லது digibank User ID & PIN மூலம் digibank செயலியினுள் புகுபதிவு செய்யவும்.

படி 4
Set Up Now என்பதைத் தட்டவும்.

படி 5
உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட 6 இலக்க Email OTP-யை உள்ளிடவும்.

படி 6
உங்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட 6 இலக்க SMS OTP-யை உள்ளிடவும்.

படி 7
உங்கள் மின்னிலக்க டோக்கனை அமைத்துள்ளீர்கள்.

உங்கள் DBS Secure Device-ஐப் (மெய்க்கருவி) பயன்படுத்தி அமைத்தல்

படி 1
உங்கள் digibank செயலியை இயக்கி, Digital Token-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2
Set Up Now என்பதைத் தட்டவும்.

படி 3
உங்கள் Touch / Face ID அல்லது digibank User ID & PIN மூலம் digibank செயலியினுள் புகுபதிவு செய்யவும்.

படி 4
Set Up Now என்பதைத் தட்டவும்.

படி 5
Physical Token-ஐத் தேர்ந்தெடுக்கவும், உங்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு 6 இலக்க SMS OTP அனுப்பப்படும். திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, 6 இலக்க SMS OTP-யை உங்கள் மெய்க்கருவியிலும் (Physical Token) உங்கள் உங்கள் 6 இலக்கக் குறியீட்டை உங்கள் digibank செயலியிலும் உள்ளிடவும்.

படி 6
உங்கள் மின்னிலக்க டோக்கனை அமைத்துள்ளீர்கள்.

DBS Secure Device (மெய்க்கருவி) இல்லாமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியில் மாற்றங்களுடன் அமைத்தல் - பதிவுக் குறியீட்டைக் கோருதல்

படி 1
உங்கள் digibank செயலியை இயக்கி, Digital Token-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2
Set Up Now என்பதைத் தட்டவும்.

படிி 3
உங்கள் Touch / Face ID அல்லது digibank User ID & PIN மூலம் digibank செயலியினுள் புகுபதிவு செய்யவும்.

படி 4
Tap on Set Up Now.

படி 5
உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும் அல்லது திருத்தவும், Next என்பதைத் தட்டவும்.

படி 6
உங்களிடம் மெய்க்கருவி (physical token) இல்லையென்றால், My Physical Token is Damaged/Lost என்பதைத் தட்டவும்.

படி 7
பதிவுக் குறியீட்டை உங்களுக்கு அனுப்புவதற்கு Mail My Code என்பதைத் தட்டவும்.

படி 8
உங்கள் அஞ்சல் முகவரி சரியானது என்பதை உறுதிசெய்து, தொடர Request Code என்பதைத் தட்டவும்.

படி 9
பதிவுக் குறியீட்டிற்கான கோரிக்கை முடிந்தது.

உங்கள் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் முகவரிக்கு பதிவுக் குறியீட்டை அனுப்ப 3-5 வேலை நாள்கள் ஆகும், அதுவரை காத்திருக்கவும்.

DBS Secure Device (மெய்க்கருவி) இல்லாமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியில் மாற்றங்களுடன் அமைத்தல் - பதிவுக் குறியீட்டைப் பெற்றவுடன்

படி 1
உங்கள் digibank செயலியை இயக்கவும். உங்கள் Touch / Face ID அல்லது digibank User ID & PIN மூலம் digibank செயலியினுள் புகுபதிவுசெய்யவும்.

படி 2
Set Up Now என்பதைத் தட்டவும்.

படி 3
உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்து Next என்பதைத் தட்டவும்.

படி 4
பதிவைத் தொடர Continue என்பதைத் தட்டவும்.

படி 5
உங்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட 6 இலக்க SMS OTP-யை உள்ளிடவும்.

படி 6
உங்கள் மின்னிலக்க டோக்கனை அமைத்துள்ளீர்கள்.

DBS Remit-க்குப் பணம் பெறுநரை எவ்வாறு சேர்ப்பது?
  • உங்கள் Touch / Face ID அல்லது digibank User ID & PIN மூலம் digibank செயலியினுள் புகுபதிவு செய்யவும்.
  • Pay & Transfer என்பதைத் தட்டி, Overseas என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • Add Overseas Recipient என்பதைத் தட்டி, Country-ஐத் தேர்ந்தெடுக்கவும்
  • உங்கள் பெறுநரின் வங்கி விவரங்களைப் பின்தொடர்ந்து அவர்களின் கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
  • உங்கள் பெறுநரின் விவரங்களை மீள்பார்வையிட Next என்பதைத் தட்டவும், பின்னர் Add Recipient Now என்பதைத் தட்டவும்.
  • கோரிக்கையை நிறைவுசெய்ய, 2-Factor Authentication வழிமுறைகளைப் பின்பற்றவும்.
வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவது எப்படி?

படி 1
உங்கள் Touch / Face ID அல்லது digibank User ID & PIN மூலம் digibank செயலியினுள் புகுபதிவு செய்யவும்.

படி 2
'வெளிநாடு' ஐகானையும், அதைத் தொடர்ந்து Pay & Transfer என்பதைத் தட்டவும்.

படி 3
நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் பெறுநரைத் தேர்ந்தெடுக்கவும். (உங்கள் முன் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டியலில் பெறுநர் இல்லையென்றால், Add Overseas Funds Transfer Recipient என்பதில் உள்ள படிகளைப் பின்பற்றவும்).

படி 4
Fund Source, Amount, Purpose of Transfer ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். Next என்பதைத் தட்டவும்.

படி 5
பரிமாற்ற விவரங்களை மீள்பார்வை செய்து Transfer Now என்பதைத் தட்டவும்.

படி 6
உங்கள் வெளிநாட்டு நிதி பரிமாற்றப் பரிவர்த்தனை செயலாக்கத்திற்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.

PayNow

PayNow-ஐப் பயன்படுத்தி பணத்தை எவ்வாறு மாற்றுவது?

Step 1
உங்கள் digibank கைப்பேசிச் செயலியை இயக்கவும், PayNow-ஐத் தட்டி, உங்கள் Touch / Face ID அல்லது digibank User ID & PIN. மூலம் செயலியினுள் புகுபதிவு செய்யவும்.

Step 2
பரிமாற்ற முறையைத் (mode of transfer) தேர்ந்தெடுத்து பெறுநரின் விவரங்களை உள்ளிடவும். Next என்பதைத் தட்டவும்.

Step 3
நீங்கள் எந்தக் கணக்கிலிருந்து பணம் அனுப்ப வேண்டுமோ அந்தக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் மாற்ற விரும்பும் தொகையை உள்ளிடவும். உங்கள் கருத்துக்கள் (ஏதேனும் இருந்தால்) உள்ளிட்டு) Next என்பதைத் தட்டவும்.

Step 4
உங்கள் பரிமாற்றத்தை மீள்பார்வை செய்து, பரிவர்த்தனையை முடிக்க Transfer Now என்பதைத் தட்டவும்.

PayLah!

PayLah!-வைப் பயன்படுத்தி பணத்தை எவ்வாறு மாற்றுவது?

படி 1
உங்கள் Touch / Face ID அல்லது PayLah! கடவுச்சொல்லைப் பயன்படுத்தி DBS PayLah!-வினுள் புகுபதிவு செய்யவும்.

படி 2
Home-க்குக் கீழேயுள்ள Pay என்பதைத் தட்டவும்.

படி 3
Anyone தொகுப்பின் கீழுள்ள, நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.

படி 4
உங்கள் தொடர்புப் பட்டியலிலிருந்து பெறுநரைத் தேடவும் அல்லது அவர்களின் கைப்பேசி எண்ணை உள்ளிட்டு Done என்பதைத் தட்டவும்.

படி 5
ஒரு செய்தியைத் தட்டச்சு செய்யவும் அல்லது Send as eGift (ஏதேனும் இருந்தால்) செயல்நிலையில் வைத்து, Next என்பதைத் தட்டவும்.

படி 6
பரிவர்த்தனையைச் சரிபார்த்து, பரிவர்த்தனையை முடிக்க Let's go என்பதைத் தட்டவும்.

Explore more

SavingsMaid